பெண்ணிடம் 6 பவுன் நகை, செல்போன் திருட்டு

ராயக்கோட்டை அருகே பெண்ணிடம் 6 பவுன் நகை, செல்போனை திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2022-06-16 17:35 GMT

குருபரப்பள்ளி:

ராயக்கோட்டை அருகே லிங்கனம்பட்டியை சேர்ந்தவர் ஆஷா என்கிற அகிலா (வயது 32). இவர் கடந்த 14-ந் தேதி ஸ்கூட்டரில் கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் அரசு கலைக்கல்லூரி அருகில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி பக்கமாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் ஆஷாவை பின்தொடர்ந்து வந்து, அவரது கவனத்தை திசை திருப்பி பையை திருடிச் சென்றனர். அதில் 6 பவுன் தங்க நகைகளும், ஒரு செல்போனும் இருந்தது. இது தொடர்பாக ஆஷா மகராஜகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசன் வழக்குப்பதிவு செய்து நகையையும், செல்போனையும் திருடிச் சென்ற ஆசாமிகளை தேடிவருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்