அரசு ஊழியரின் வாகனம் திருட்டு

அரசு ஊழியரின் வாகனம் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-06-04 17:37 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் அருகே உள்ள எஸ்.சிறுவயல் நரியனேந்தல் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சசிக்குமார் (வயது41). ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் தனது மோட்டார் சைக்கிளை ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள மெடிக்கல் முன்பு நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தாராம். இவ்வாறு நேற்று முன்தினம் நிறுத்திவிட்டு சென்றபோது அதனை நோட்ட மிட்ட மர்ம நபர் திருடிச்சென்றுவிட்டாராம். வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்த சசிக்குமார் தனது மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்