தர்மபுரி:
தர்மபுரியில் உள்ள பென்னாகரம் சாலையில் கட்டிட ஒப்பந்ததாரராக மதன் என்பவரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்தை திருடி சென்றனர். இதேபோல் அந்த அலுவலகத்தின் அருகே உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை பார்வையிட்டனர். இந்த திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.