பொள்ளாச்சி
பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு திருவள்ளுவர் திடல் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஒருவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ராமநாதபுரத்தை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 29) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.