மணல் கடத்திய வாலிபர் கைது

ஆம்பூர் அருகே மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-10-11 16:47 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த ஒரு டிராக்டரை மடக்கியபோது அதில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து ஆம்பூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை ஓட்டி வந்த கங்காபுரம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் ஆம்பூர் நகராட்சி 6-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலரான ஜெயபால் (36) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் கவுன்சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்