நாகர்கோவிலில் நள்ளிரவில் பரபரப்பு இளம்பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

நாகர்கோவிலில் நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. குடும்பத்தகராறில் கணவரே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.;

Update: 2023-06-21 21:24 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. குடும்பத்தகராறில் கணவரே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அரிவாள் வெட்டு

நாகர்கோவில் பார்வதிபுரம் அருகில் உள்ள கட்டையன்விளையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். சமீபத்தில்தான் இவர் ஊர் திரும்பியதாக கூறப்படுகிறது. இவருடைய மனைவி ஏஞ்சலின் டயா (34). இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு நடந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவிலும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.. இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் அரிவாளால் ஏஞ்சலின் டயாவின் தலை, கழுத்து, கை உள்பட பல இடங்களில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு உடலின் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சத்தம் போட்டு அலறினார்.

போலீஸ் விசாரணை

ஏஞ்சலின் டயாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதற்கிடையே செல்வராஜ் வடசேரி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். நள்ளிரவில் நடந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்