இளம்பெண் திடீர் மாயம்

சிவகாசி அருகே இளம்பெண் திடீரென மாயமானார்.;

Update: 2023-10-22 19:34 GMT

சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை மணி மனைவி முருகலட்சுமி (வயது 23). இவர் தனது கணவரிடம், தன்னுடைய உறவினர்கள் கொடைக்கானல் சுற்றுலா செல்ல இருப்பதாகவும், தானும் அவர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு பிச்சைமணி தன்னிடம் போதிய பணம் இல்லை என்றும், சுற்றுலா செல்ல வேண்டாம் என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகலட்சுமி, பிச்சைமணிக்கு போன் செய்து, நீ உன் வாழ்க்கையை பார்த்துக்கொள், நான் என்னுடைய வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறேன். உன் பிள்ளைகளை உன் வீட்டில் விட்டு, விட்டு செல்கிறேன், என்னை தேட வேண்டாம் என்று கூறிவிட்டு செல்போனை சுவிட் ஆப் செய்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த பிச்சைமணி வீட்டிற்கு வந்தார். ஆனால் வீட்டில் முருகலட்சுமி இல்லை. இதுகுறித்து அவர் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்