காட்டு அத்திப்பழங்கள் விளைச்சல் அமோகம்
காட்டு அத்திப்பழங்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது.;
கூடலூர்,
கூடலூர் பகுதியில் கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. ஆனால், கோடை காலத்தை சமாளித்து வளரக்கூடிய அத்தி, நாவல் உள்ளிட்ட மரங்கள் பசுமையாக காணப்படுகிறது. இந்த நிலையில் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்த காட்டு அத்திப்பழங்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. மரங்களில் கொத்து, கொத்தாக அத்திப்பழங்கள் காய்த்து தொங்குகின்றன. இதன் காரணமாக குரங்குகள், அணில்கள் உள்ளிட்ட சிறு வன உயிரினங்களுக்கு உணவு பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து உள்ளது. இதுகுறித்து சித்த மருத்துவர்கள் கூறும்போது, காட்டு அத்திப்பழங்கள் சாப்பிடுவதால் ரத்த விருத்தி ஏற்படும். மேலும் சிறுவர்கள் முதல் அனைத்து வயதினரும் சாப்பிடுவதால் உடல் பலம் பெறும் என்றனர்.