பச்சை மிளகாய் விளைச்சல் அமோகம்

இடையக்கோட்டை பகுதியில் பச்சை மிளகாய் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.;

Update: 2023-01-11 18:45 GMT

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்பகுதியில் பச்சை மிளகாய் சாகுபடி அதிகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அந்த பகுதியில் பச்சை மிளகாய் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.

இதனை அறுவடை செய்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விவசாயிகள் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். மார்க்கெட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.50-க்கு விற்றது. வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்து, நேற்று ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.25-க்கு விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து சம்பா மிளகாய்களை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உள்ளூர் பகுதிகளில் விளையும் பச்சை மிளகாய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்