உளுந்து விளைச்சல் குறைவு

வெம்பக்கோட்டை பகுதிகளில் உளுந்து விளைச்சல் குறைந்து காணப்படுகிறது.

Update: 2023-06-14 20:48 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை பகுதிகளில் உளுந்து விளைச்சல் குறைந்து காணப்படுகிறது.

உளுந்து சாகுபடி

வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, அம்மையார்பட்டி, சிப்பி பாறை, அலமேலுமங்கைபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து செவல்பட்டி விவசாயி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

வெம்பக்கோட்டை பகுதியில் பரவலாக உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 90 நாள் பயிரான உளுந்து தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. உளுந்து கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது. மற்ற பயிர்களை காட்டிலும் குறைவான தண்ணீரும், 3 முறை மருந்தும் தெளிக்கப்படுகிறது.

விவசாயிகள் ஏமாற்றம்

மேலும் விவசாயக்கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகிறோம். உரமிட்டு, நன்கு பராமரித்தால் நல்ல விளைச்சலை உளுந்து தரும். இங்கு விளையும் உளுந்தினை தென்காசி, திருவேங்கடம், பகுதியில் இருந்து மொத்த வியாபாரிகள் நேரடியாக வந்து விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 7 முதல் 8 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் தற்போது ஏக்கருக்கு 5 குவிண்டால் முதல் 6 குவிண்டால் வரை கிடைத்துள்ளது. இதனால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்