கம்பு சாகுபடியில் விளைச்சல் அமோகம்

ஆலங்குளம் பகுதிகளில் கம்பு சாகுபடியில் விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் கூறினர்.

Update: 2023-01-29 19:40 GMT

ஆலங்குளம், 

ஆலங்குளம் பகுதிகளில் கம்பு சாகுபடியில் விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் கூறினர்.

கம்பு சாகுபடி

ஆலங்குளம் பகுதியில் கீழராஜகுலராமன், அனந்தப்பநாயக்கர்பட்டி, கன்னிதேவன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கம்பு பயிர் சாகுபடி செய்யபட்டு உள்ளது. புரட்டாசி மாதம் சாகுபடி செய்யப்பட்ட கம்பு விளைந்து தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

குளிர்காலத்தில் சாகுபடி செய்யபட்டதால் கிணற்று பாசனம் இல்லாமல் மானாவாரியில் விளைந்து உள்ளது. கிராமங்களில் அதிகமாக சாகுபடி செய்யப்பட்ட கம்பு பயிர் விலை குறைவாலும், மக்காச்சோளம் அதிக விலைக்கு போவதாலும் விவசாயிகள் கம்பு சாகுபடி செய்வதை குறைத்து கொண்டனர்.

அதிக மகசூல்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளத்திற்கு அடுத்த படியாக கம்பு பயிரினை சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. மகசூல் நன்றாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஒரு ஏக்கர் நிலத்தில் 5 முதல் 6 குவிண்டால் வரை கம்பு கிடைக்கிறது. ஒரு குவிண்டால் ரூ.2,500 முதல் ரூ.2,600 வரை விற்பனை செய்யபடுகின்றது. மாட்டு தீவனம், கோழி தீவனம் தயாரிக்க கம்பினை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்