"அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது" - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

பழனி மாநாட்டு கண்காட்சிகள் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-25 05:33 GMT

கோப்புப்படம்

பழனி,

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று தொடங்கியது. 2-ம் நாள் மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு திருவேல் இறைவன் தீத்தமிழ் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து முருகனும் பரதமும், திருப்புகழ் தேனிசை, யாமிருக்க பயமேன் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாலையில் மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. அதையடுத்து இரவு விருது வழங்கும் நிகழ்ச்சியுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நடைபெறும் நிகழ்ச்சி இது. எல்லோருக்குமான அரசு இது. இந்து சமய அறநிலையத்துறைக்கு, மாநாட்டை நடத்தும் கடமை உள்ளது. பழனியை சுற்றிலும் அரோகரா கோஷம் கேட்டுக் கொண்டிருக்கிறது. வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. பழனி மாநாட்டு கண்காட்சிகள் 5 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் எடுக்கிற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டனர். 2ம் நாள் நிகழ்ச்சியில் சான்றோர்கள், ஆதினங்கள், நீதி அரசர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. 2வது நாள் மாநாடும் வெற்றி பெறும்" என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்