வெயில் வாட்டி வதைப்பதால் கட்டுமான தொழிலாளர்களின் வேலை நேரத்தை மாற்ற வேண்டும்; அதிகாரி அறிவுரை
‘வெயில் வாட்டி வதைப்பதால் கட்டுமான தொழிலாளர்களின் வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்’ என்று திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சங்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.;
'வெயில் வாட்டி வதைப்பதால் கட்டுமான தொழிலாளர்களின் வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும'் என்று திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சங்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.
கோடை வெப்பம்
திண்டுக்கல்லில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதையடுத்து கோடை வெப்பத்தில் இருந்து தொழிற்சாலைகள், கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சங்கர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒரு தொழிலாளி, ஒரு நாளைக்கு 4.5 லிட்டர் அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். அதனை தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டும். இதுவே தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் என்றால், குடிநீர் சட்டப்பட்டி 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் வழங்கப்பட வேண்டும்.
வெப்பம் அதிகம் உள்ள ஸ்டீல் ரோலிங், வெப்ப உலை, டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகியவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் சுழற்சி முறையில் ஓய்வு எடுக்கும் வகையில் ஓய்வு அறை அமைக்கப்பட வேண்டும்.
மாற்றி அமைக்க வேண்டும்
நேரடியாக சூரிய வெப்பம் பட்டாலும் அதனையும் தாங்கிக்கொண்டு வேலை செய்யும் கட்டுமான தொழிலாளர்களின் வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். அவர்களுக்கு சுத்தமான போதுமான குடிநீர், கூடுதலாக எலக்ட்ரோலைட் கலந்த நீர் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பின் போதிய இடைவெளியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் கோடை வெயிலின் தாக்கத்தால் தொழிலாளர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.