மீன்பிடிக்க சென்றபோது ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
மீன்பிடிக்க சென்றபோது ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
கோவை
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது 33), கூலி தொழிலாளி. இவர் தனது உறவினர்கள் 2 பேருடன் கோவை அருகே உள்ள குமிட்டிபதி வழியாக செல்லும் ஆற்றில் மீன்பிடிக்க வந்தார். பின்னர் 3 பேரும் அந்த ஆற்றில் தூண்டில்போட்டு மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது தூண்டிலில் பெரிய மீன் சிக்கியதால் அதை பிடிப்பதற்காக அந்தோணி ஆற்றுக்குள் இறங்கினார்.
அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால், அவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி பலியானார். இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று ஆற்றுக்குள் இறங்கி அந்தோணியின் உடலை மீட்டனர். இது தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.