காாியாபட்டி
காரியாபட்டி தாலுகா தோணுகால் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சிவகங்கை மாவட்டம் அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னத்துரை (வயது 30) என்பவர் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சின்னத்துரை வேலையை முடித்துவிட்டு வெளியே சென்று வருவதாக கூறி மோட்டார் சைக்கிளில் சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தோணுகால் அருகே அடையாளம் தெரியாத வாகனம் சின்னத்துரை மோட்டார் சைக்கிள் மீது மோதிவிபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.