விபத்தில் தொழிலாளி பலி

திருச்சுழி அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.

Update: 2023-01-21 19:21 GMT

திருச்சுழி,

திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டிபுதூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 52). இவர் சோலார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் இருந்து சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அருப்புக்கோட்டை - சாயல்குடி மெயின் ரோட்டில் கத்தாளம்பட்டி பெட்ரோல் பல்க் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதியதில் சிவக்குமார் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைகாக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ம.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்