கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
கண்டாச்சிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கண்டாச்சிபுரம், கண்டாச்சிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.கண்டாச்சிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கண்டாச்சிபுரம் அருகே நல்லாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 36). விவசாய கூலித்தொழிலாளி. இவர் புளியந்தாங்கல் ஏரி அருகே உள்ள கிணற்றின் அருகில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி அவர் இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார், தீயணைப்பு துறையினர் மூலம் ஏழுமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.