பாலத்தை சாலையுடன் இணைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

பாலத்தை சாலையுடன் இணைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2022-09-26 19:39 GMT

தஞ்சை அருகே உள்ள பேய்வாரி வாய்க்காலில் புதிய பாலம் கட்டுமான பணி முடிந்துள்ளது. எனவே பாலத்தை சாலையுடன் இணைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேய்வாரி வாய்க்கால்

தஞ்சை மாவட்டம் வல்லம்- ஆலக்குடி செல்லும் சாலையில் பேய்வாரி வாய்க்கால் உள்ளது. வல்லம்- ஆலக்குடி வழியாக தினமும் ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, பூதலூர் பகுதிகளுக்கு மாணவர்கள், பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். மழைக்காலத்தில் பேய்வாரி வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் வந்தால், இந்த சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால் பழைய பாலத்தை இடித்துவிட்டு, தற்போது புதிய பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்தது. இந்த பாலம் கட்டும் பணியால் வாகனங்கள் சென்று வர அருகே தற்காலிக வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

விரைந்து முடிக்க வேண்டும்

தற்போது புதிய பாலம் கட்டுமான பணிகள் நடந்து முடிந்துள்ளது. ஆனால் பாலத்தை சாலையுடன் இணைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் பாலத்தை சாலையோடு இணைக்கும் பணிகளை விரைவாக துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்