ஜம்புகேஸ்வரர் கோவிலில் ஓலைச்சுவடிகள் அட்டவணைப்படுத்தும் பணி

ஜம்புகேஸ்வரர் கோவிலில் ஓலைச்சுவடிகள் அட்டவணைப்படுத்தும் பணி நடக்கிறது.;

Update:2022-07-15 01:24 IST

ஸ்ரீரங்கம்:

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது கவர்னர் உரையில், கோவில்களில் உள்ள ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான செயல்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழர்கள் மற்றும் தகவல் துறை மூலம் பரிந்துரைக்கப்பட்டு வல்லுனர் திருவேங்கடம், ஆய்வாளர் சந்தியா, ஓலைச்சுவடி பராமரிப்பாளர் நீலகண்டன் உள்ளிட்ட குழுவினர் கடந்த 1-ந் தேதி முதல் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் உள்ள பழங்காலத்து 7 ஆயிரம் ஓலைச்சுவடிகளை அட்டவணைப்படுத்தி வருகின்றனர். இந்த ஓலைச்சுவடிகள் ஒரு மீட்டர் நீளம் உள்ளது. இவை 18-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஓலைச்சுவடிகளில் உள்ள ஆவணங்கள் கண்டறியப்பட்டால் கோவிலின் பல முக்கிய விழாக்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் கண்டறியப்படலாம் என்று கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்