கொடும்பாவியை ஊர்வலமாக இழுத்து சென்று ஒப்பாரி வைத்த பெண்கள்
கருகும் பயிரை காப்பாற்ற மழை வேண்டி;
திட்டச்சேரி:
திருமருகல், திட்டச்சேரி பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது. போதிய தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் 600 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் பல்வேறு சிரமங்கள் அடைந்து வருகின்றனர்.இந்த நிலையில் மழை பெய்ய வேண்டி திட்டச்சேரி வெள்ளத்திடல் கிராமத்தில் நேற்று கொடும்பாவியை கட்டி அதை பெண்கள் ஊர்வலமாக இழுத்து சென்று ஒப்பாரி வைத்தனர். மேலும் கொடும்பாவியை வீடு, வீடாக இழுத்து சென்று தர்மம் எடுத்து கொட்டும் மழையே பொழிந்துவா, கொடும்பாவியே ஒழிந்துபோ என்று ெபண்கள் கோஷமிட்டு சென்றனர்.