பெண் உடல் நசுங்கி சாவு

திருக்கோவிலூர் அருகே பெண் உடல் நசுங்கி சாவு;

Update: 2022-10-21 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள கா.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி வனிதா(வயது 45). இவர் அதே ஊரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஜி.அரியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நின்று கொண்டிருந்த மினி லாரி ஒன்று திடீரென சாலையின் குறுக்கே செல்ல முயன்றது. இதனால் அதன் மீது மோதாமல் இருக்க சீனிவாசன் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது நிலை தடுமாறி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் சாலையில் விழுந்த வனிதா மீது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லேசான காயத்துடன் உயிர் தப்பிய சீனிவான் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்