லாரி டிரைவரை ஏமாற்றிய பெண் தென் மாவட்டங்களிலும் கைவரிசை

திருமண செயலின் மூலம் லாரி டிரைவரை ஏமாற்றி மோசடி செய்த பெண் தென் மாவட்டங்களிலும் பலரை ஏமாற்றி உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.;

Update:2022-09-28 01:30 IST

எடப்பாடி:

திருமண செயலின் மூலம் லாரி டிரைவரை ஏமாற்றி மோசடி செய்த பெண் தென் மாவட்டங்களிலும் பலரை ஏமாற்றி உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

லாரி டிரைவர்

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள சாணாரப்பட்டியை சேர்ந்தவர் செந்தில் (வயது 48), லாரி டிரைவர். இவருடைய மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளான்.

மனைவி உயிரிழந்த நிலையில், செந்தில் மறுமணம் செய்திட முடிவு செய்து, ஜோடி ஆப்-ல் பதிவு செய்து பெண் தேடி வந்தார். இந்நிலையில் அதே ஆப் மூலமாக அறிமுகமாகிய பெண் ஒருவர் தான் கணவரை இழந்தவர் என்றும், நான் உங்களைப் போன்ற ஒரு திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என ஆசை வார்த்தை கூறி அவரை ஏமாற்றி திருமணம் செய்தார்.

திருமணம் ஆன ஒரே நாளில் வீட்டிலிருந்த நகை பணங்களுடன் அந்த பெண் மாயமானார். திருமண செயலின் மூலம் ஏமாற்றிய பெண் குறித்து டிரைவர் செந்தில் கொடுத்த புகாரின் பேரில் சேலம் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென் மாவட்டங்களிலும் மோசடி

இந்த நிலையில் அந்த பெண், ஏற்கனவே கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மற்றும் தேனி மற்றும் மதுரை ஆகிய தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளிகள் உள்ளிட்ட பலரை இதே வகையில் ஏமாற்றி பணம் நகைகளை மோசடி செய்தது தெரிய வந்து உள்ளது. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள அந்த பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இ்தனிடையே அந்த பெண் சமீபத்தில் தனது வக்கீல்கள் மூலம் பாதிக்கப்பட்ட லாரி டிரைவர் செந்தில் உடன் சமரசம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்