போலீஸ் தேடிய பெண் கோர்ட்டில் சரண்

போலி நகையை அடகு வைத்து பணம் வாங்கிய விவகாரத்தில் போலீஸ் தேடிய பெண் கோர்ட்டில் சரண் அடைந்தார்.;

Update:2022-06-23 01:14 IST

நாகர்கோவில்:

போலி நகையை அடகு வைத்து பணம் வாங்கிய விவகாரத்தில் போலீஸ் தேடிய பெண் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கணவன்- மனைவி

நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜேசு ராஜா (வயது 48). இவரும், இவருடைய மனைவி அனு என்ற அனுஷாவும் கூட்டாக சேர்ந்து போலி நகையை நிதி நிறுவனத்தில் அடகு வைத்து மோசடி செய்ததாக கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ஜேசு ராஜாவை கடந்த 17-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது ஜேசு ராஜா மற்றும் அனுஷா மீது கருங்கல் போலீஸ் நிலையத்தில் போலி நகையை அடமானம் வைத்து பணம் வாங்கியது தொடர்பாக 2 வழக்குகள் உள்ளது. ஜேசு ராஜா கைதான நிலையில் அவருடைய மனைவி அனுஷா தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். எனவே அவரை போலீசார் தேடி வந்தனர்.

கோர்ட்டில் சரண்

இந்த நிலையில் அனுஷா நேற்று நாகர்கோவிலில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி அனுஷாவை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி அனுஷா தக்கலையில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோர்ட்டில் சரண் அடைந்த அனுஷா மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். விரைவில் இதற்காக கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்