விபத்தில் காயம் அடைந்த பெண் சாவு

Update: 2023-08-02 19:30 GMT

மொரப்பூர்:-

கடத்தூர் அருகே உள்ள கோபிசெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 32) இவரது மனைவி அருணா(28). இவர்களுக்கு ஒரு மாத ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று அருணாவை மருத்துவ பரிசோதனைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தினேஷ் காரில் அழைத்து சென்றார். காரை தினேஷ் ஓட்டி சென்றார். காரில் அருணா, இவரது ஒரு மாத குழந்தை மற்றும் தினேசின் மாமியார் இளங்கனி (50) ஆகியோர் சென்றனர். மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து மீண்டும் அவர்கள் ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர். கம்பைநல்லூர் அருகே கடம்பரஅள்ளி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் அருணா, இளங்கனி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இளங்கனி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்