கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
ஓசூரில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து பெண் இறந்தார்.
ஓசூர்
கர்நாடக மாநிலம் பெங்களூரு அக்கியப்பா கார்டன் பகுதியை சேர்ந்தவர் கொழிஞ்சியம்மா (வயது 55). இவர் ஓசூரில் காரப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர், ஓசூர் கும்பாரபேட்டையில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர் எதிர்பாராதவிதமாக முதல் தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த கொழிஞ்சியம்மாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கொழிஞ்சியம்மா உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.