பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

Update: 2022-06-22 21:59 GMT

பவானிசாகர்:

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை மற்றும் தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது மழை குறைந்த காரணத்தால் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது. நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 914 கன அடி தண்ணீர் சராசரியாக வந்தது. அணையின் நீர்மட்டம் 82.53 அடியாக இருந்தது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து சராசரியாக வினாடிக்கு 393 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 82.43 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 900 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்