சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
கம்மாபுரம் அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
கம்மாபுரம்
கம்மாபுரம் அடுத்த கத்தாழை காலனியை சேர்ந்தவர் விஜயவேல். இவருடைய மனைவி மகாலட்சுமி (வயது 35). இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவருடைய பாழடைந்த வீட்டின் அருகே நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து மகாலட்சுமி மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.