இறந்தவரின் உடலை சிரமத்துடன் கொண்டு சென்ற கிராம மக்கள்

சாலை வசதியில்லாததால் இறந்தவரின் உடலை கிராம மக்கள் சிரமத்துடன் கொண்டு சென்றனர்.

Update: 2023-01-13 20:05 GMT

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள பீரங்கி மேடு ரெட்டியார்குளம் பகுதியில் வசித்து வந்தவர் சின்னு(வயது 70). இவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து உறவினர்கள் அவரது உடலை எடுத்துச் செல்ல பாதை இல்லாததால் சிரமப்பட்டு மயானத்திற்கு எடுத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்