சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது
உச்சிப்புளி ரெயில்வே கேட் அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 15 பேர் உயிர் தப்பினர்.;
பனைக்குளம்,
உச்சிப்புளி ரெயில்வே கேட் அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 15 பேர் உயிர் தப்பினர்.
வேன் கவிழ்ந்தது
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பொள்ளாச்சியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் வேன் ஒன்றில் புறப்பட்டுள்ளனர். தொடர்ந்து நேற்று ராமநாதபுரம்-ராமேசுவரம் இடைப்பட்ட உச்சிப்புளி ரெயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் உருண்டு தலைகுப்புற கவிழ்ந்தது.
தப்பினர்
வேன் தலைகீழாக கவிழ்ந்து கிடந்த நிலையில் வேனில் இருந்த பக்தர்கள் அனைவரும் எந்த ஒரு காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த வேனை பொக்லைன் எந்திரம் மூலம் கயிறு கட்டி இழுத்து சாலைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விபத்து குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.