பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-06-06 08:18 GMT

பழனி:

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான வைகாசி விசாகம். இந்த திருவிழா பழனியில் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. கொடியேற்றத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள், நகர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்