வயலில் லாரி கவிழ்ந்தது

அம்பை அருகே வயலில் லாரி கவிழ்ந்தது.;

Update: 2023-04-06 20:22 GMT

அம்பை:

கேரள மாநிலம் மங்களாபுரத்தில் இருந்து சுண்ணாம்பு மண் ஏற்றிக் கொண்டு கல்லிடைக்குறிச்சி அருகே ெபாட்டல் பகுதியில் உள்ள ஆலைக்கு லாரி வந்தது. அங்கு சுண்ணாம்பு மண்ணை இறக்கிவிட்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த மனு என்பவர் ஓட்டினார். அம்பை-முக்கூடல் மெயின் ரோட்டில் கோவில்குளம் அருகில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள வயலில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் டிரைவர் மனு லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து அம்பை போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்