கழிவுநீர் கால்வாய்க்குள் குடிநீர் குழாய் பதித்த அவலம்

வேலூர் அருகே கழிவுநீர் கால்வாய்க்குள் குடிநீர் குழாய் பதித்த அவலம் நடந்துள்ளது.

Update: 2023-09-27 19:59 GMT

வேலூர் அருகே கழிவுநீர் கால்வாய்க்குள் குடிநீர் குழாய் பதித்த அவலம் நடந்துள்ளது.

வேலூரை அடுத்த சதுப்பேரி அருகே பெரியஅகமேடு கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அங்குள்ள பள்ளி தெருவில் கழிவுநீர் கால்வாயின் உள்புறத்தில் கழிவுநீருக்குள் மூழ்கிய நிலையில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது மழை பெய்து வருவதால் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கழிவுநீருக்குள் குழாய் செல்லும் வகையில் கால்வாய் அமைத்துள்ளதால் குழாயில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் நிலை உள்ளது. எனவே, கழிவுநீர் கால்வாயில் செல்லும் குழாயை அப்புறப்படுத்தி விட்டு, மண்ணில் புதைத்து குடிநீர் வினியோகிக்க வேண்டும். மேலும் அங்கு புதிய கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்