கடம்பூர் அருகே மலைப்பாதையில் 30 அடி ஆழ பள்ளத்தில் டிராக்டர் பாய்ந்தது

கடம்பூர் அருகே மலைப்பாதையில் 30 அடி ஆழ பள்ளத்தில் டிராக்டர் பாய்ந்தது. இதில் டிரைவர் உயிர்தப்பினார்.;

Update: 2022-06-23 20:51 GMT

டி.என்.பாளையம்டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூர் அருகே உள்ள அத்தியூர்புதூரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 38). இவர் நேற்று கடம்பூர் மலைப்பாதையில் டிராக்டரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஊத்துக்குளி என்ற இடத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர 30 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்தது. இதில் டிராக்டர் இடிபாடுகளுக்குள் பெருமாள் சிக்கிக்கொண்டார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் சேர்ந்து பெருமாளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு டிராக்டருக்கு அடியில் சிக்கி கிடந்த பெருமாளை மீட்டனர். இதில் காயம் அடைந்த பெருமாளை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்