சிங்கமுகத்தின் கோபுர பகுதி இடிந்து விழுந்தது

சிங்கமுகத்தின் கோபுர பகுதி இடிந்து விழுந்தது

Update: 2022-07-27 20:21 GMT

கும்பகோணம்

கும்பகோணத்தில் ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள கோபுரங்களில் பல்வேறு கலைநயமிக்க சிற்பங்களும் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் பழமையான வண்ண ஓவியங்களும் அமையப்பெற்று புராதன சின்னமாக விளங்குகிறது. கும்பகோணம் பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் கும்பகோணம் ராமசாமி கோவில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ராஜகோபுரத்தில் இடி தாக்கியது. இதனால் ராஜகோபுரத்தின் உச்சியில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மகாநாசி என அழைக்கப்படும் கலை நயமிக்க சிங்கமுகம் போன்ற கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் கோபுரத்தின் இடிந்த பகுதிகளை பார்வையிட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தி கோபுரத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்