திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ``பைனாகுலர்''தளம் அமைக்க சுற்றுலாதுறையினர் ஆய்வு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருந்து சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்துபொழுது போக்குவதற்காக ``பைனாகுலர் தளம்''அமைப்பதற்காக சுற்றுலா துறையினர் ஆய்வு செய்தனர்.;

Update: 2023-05-20 21:17 GMT

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருந்து சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்துபொழுது போக்குவதற்காக ``பைனாகுலர் தளம்''அமைப்பதற்காக சுற்றுலா துறையினர் ஆய்வு செய்தனர்.

படிக்கட்டுகள் பயன் இல்லை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் மலை மேல் குமரர் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு தனிசன்னதி அமைந்துள்ளது. இதுதவிர தெய்வீகப் புலவர் நக்கீரருக்காக முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள ``வேல்'' கொண்டு மலையை பிளந்து உருவாக்கியதாக புராண வரலாற்றில் கூறப்படும் காசிக்கு நிகரான கங்கை தீர்த்த குளம் உள்ளது. இங்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்காக மலையின் கிழக்கு பகுதியில் 830 மீட்டர் உயரத்திற்கு 595 புதிய படிக்கட்டுகள் கட்டுப்பட்டுள்ளது. மேலும் படிக்கட்டுப் பாதையில் 100 மீட்டர் இடைவெளிக்கு ஒருமண்டபம் வீதம் 8 இளைப்பாறும் மண்டபங்கள் கட்டப்பட்டது. செங்குத்தாக படிக்கட்டுகள் அமைந்துள்ளதால் முதியவர்கள், சிறுவர், சிறுமிகள் சென்று வர முடியாதநிலை இருந்து வருகிறது. அதனால் படிக்கட்டுப் பாதைபயன்படாத நிலையில் காட்சிபொருளாக இருந்து வருகிறது.

ரோப்கார் வசதி

இந்த நிலையில் கடந்த 2004-ம் ஆண்டில் புதிய படிக்கட்டுகள் பாதை வழியே மலையில் ``ரோப் கார்''அமைக்க சுற்றுலாத்துறையினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நாளடைவில் ``ரோப்கார்'' பேச்சு இல்லாத நிலை உருவானது. இந்தநிலையில் திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்கு வசதியாக ``ரோப்கார்''அமைக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வலியுறுத்தலின் பேரில் அதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா? என்றுதொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

பைனாகுலர் தளம்

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருந்து மதுரையின் இயற்கையின் அழகை கண்டு ரசிக்கவும், சுற்றுலா துறையினர் சுற்றுலா பயணிகள் கவருவதற்காகவும் ரூ.45 லட்சத்தில் மலை உச்சியில் அதிநவீன ``பைனாகுலர் தளம்'' அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பைனாகுலர் தளம் அமைக்க சுற்றுலா துறை அதிகாரிகள் உரிய இடத்தினை ஆய்வு மேற்கொண்டனர். பைனாகுலர்தளம் அமைக்கும்பட்சத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். மேலும் பயணிகள் பைனாகுலர்கள் மூலம்நீண்ட தூரம் உள்ள இயற்கையின் அழகை கண்டு வியந்துபொழுதுபோக்க பெரும் வாய்ப்பாக அமையும்.

Tags:    

மேலும் செய்திகள்