வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
திருச்சி:
திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்தும், காதலிக்குமாறு வற்புறுத்தியதாகவும் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜஸ்டின் ஸ்டாலின் (வயது 31) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஜஸ்டின் ஸ்டாலினிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.