காரில் இருந்த வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு

காரில் இருந்த வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு போனது.

Update: 2023-10-15 19:24 GMT

கோவையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 61). வெள்ளி, நகை வியாபாரி. சம்பவத்தன்று கோவில்பட்டி பகுதியில் உள்ள நகை கடைகளில் வெள்ளி பொருட்களை விற்பனை செய்து விட்டு காரில் சிவகாசிக்கு வந்துள்ளார். பின்னர் வடக்கு ரதவீதியில் உள்ள ஒரு நகை கடைக்கு சென்று அந்த கடைக்கு தேவையான வெள்ளி பொருட்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது தான் கொண்டு வந்த வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை காரில் வைத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துகிருஷ்ணன் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் இந்த திருட்டு சம்பவத்துக்கும் தனது கார் டிரைவர் சாமுவேல் கணேசுக்கும் தொடர்பு இருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்