மின் ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருப்பத்தூரில் மின் ஊழியர் வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

Update: 2022-12-08 17:43 GMT

திருப்பத்தூர் டவுன் அவ்வை நகர் பகுதியில் வசிப்பவர் ராமலிங்கம் (வயது 53) மின்சார வாரிய அலுவலகத்தில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி அன்பு (47). இவர் மின்சார வாரிய நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். நேற்று இவரது மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு வந்துள்ளனர். பின்னர் வேலை முடிந்து மாலை 6.30 மணி அளவில் வீட்டுக்கு சென்ற போது பீரோ மற்றும் கபோடுகள் உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த ரூ.75 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் நகை, வெள்ளி பொருட்களளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தாலுகா போலீசில் அன்பு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

பீரோவில் வைக்காமல், வேறு ஒரு இடத்தில் மறைத்து வைத்திருந்த 12 பவுன் நகைகள் மர்ம நபர்களின் கண்ணில் படாமல் தப்பியது.

Tags:    

மேலும் செய்திகள்