தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு நடந்துள்ளது.
கரூர் செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் ஜெயதீபன் (வயது 54). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் மீண்டும் வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஜெயதீபன் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. இந்த திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.