கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

தரகம்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-01-01 18:44 GMT

பகவதி அம்மன் கோவில்

கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பவுர்ணமி, அமாவாசை மற்றும் செவ்வாய், வெள்ளிகிழமைகளில் பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். இந்த கோவிலின் கருவறைக்கு முன்பாக பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் வகையில் கோவில் நிர்வாகத்தின் சார்பாக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ேகாவில் பூசாரி பூஜையை முடித்து கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து நேற்று காலை வழக்கம்போல், பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கருவறை முன்பு இருந்த உண்டியலை உடைக்கப்பட்டு சில்லறைகள் சிதறி கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊர் முக்கியஸ்தவர்கள் சிந்தாமணிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர். விசாணையில், மர்மநபர்கள் கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, கோவிலை உண்டியலை உடைத்து பணத்தை ெகாள்ளையடித்து சென்ற மர்நமபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், கோவிலிலை சுற்றி பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கோவிலில் உண்டியலில் சுமார் ரூ.50 ஆயிரம் காணிக்கை பணம் இருக்கும் என பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

போலீசார் விசாரணை

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தரகம்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள முனியப்பன் கோவில், வீரப்பூர் சாலையில் உள்ள கன்னிமாரம்மன் கோவிலும் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்