பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் முகநூலில் பதிவிட்ட வாலிபர் கைது

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் முகநூலில் பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-06 19:58 GMT

பாளையங்கோட்டை அருகே தெற்கு அரியகுளம் முப்பிடாதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் சஞ்சய்குமார் (வயது 20). இவர் முகநூல் பக்கத்தில் போலீஸ் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பிரச்சினையை தூண்டும் வகையிலும் புகைப்படத்துடன் வாசகம் பதிவிட்டு இருந்தாராம். இதுகுறித்து தாலுகா போலீஸ் நிலைய ஏட்டு கணேசன் புகார் செய்தார். அதன்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய்குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்