வாலிபருக்கு கத்திக்குத்து
மதுரையில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
திருப்பரங்குன்றம்,
மதுரை திருநகரை அடுத்த நேதாஜி நகரை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 33).இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் பால்பாண்டி அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வந்துள்ளார்.அப்போது பால்பாண்டியை சிலர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருநகர் போலீசில் பால்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.