பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபர் கைது

தேன்கனிக்கோட்டையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-05-13 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையிலான போலீசார் மாருப்பள்ளி பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பொதுமக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வாலிபர் ஒருவர் தகாத வார்த்தைகளை பேசி கொண்டு இடையூறு செய்து கொண்டிருந்தார். அப்போது போலீசார் வாலிபரை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதையடுத்து போலீசார் தகாத வார்த்தை பேசிய கச்சுவாடியை சேர்ந்த மது (வயது 21) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்