மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டர்.
பேட்டை:
நெல்லை சுத்தமல்லியை அடுத்த பழவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்து செல்வம் (வயது 28). டிரைவரான இவர் நடுக்கல்லூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தபோது, கோடகநல்லூர் கீழ அக்கிரகார தெருவை சேர்ந்த சுரேஷ் (20) என்பவர் மதுகுடிக்க பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர் மறுக்கவே சட்டை பையில் இருந்து பணத்தை பறிக்க முயன்றதுடன் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து முத்து செல்வம் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்குப்பதிந்து, சுரேசை கைது செய்து சிறையில் அடைத்தார்.