அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

மோகனூர் அருகே இருதரப்பினர் இடையே மோதலில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-27 18:45 GMT

மோகனூர்

மோகனூர் அருகே உள்ள கொமாரபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 17 மற்றும் 18-ந் தேதிகளில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற மாவிளக்கு பூஜையில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் மோகனூர்-வேலூர் செல்லும் சாலையில் சென்ற அரசு பஸ் கண்ணாடி உடைத்தனர். இதுகுறித்து பஸ் டிரைவர் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பஸ் கண்ணாடியை உடைத்த 16 கீழ்பாலப்பட்டியை சேர்ந்த டிரைவராக வேலை பார்க்கும் புஷ்பராஜ் (வயது 28) என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்