ஒலிபெருக்கி கடை உரிமையாளரை தாக்கிய வாலிபர் கைது

ஒலிபெருக்கி கடை உரிமையாளரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-11-10 19:57 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே ஆனைகுடி ஏவாஞ்சல் புரத்தை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (வயது 52) ஒலிபெருக்கி உரிமையாளர். ஆனைகுடி மேலத்தெரு கக்கன் நகரை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் ஜெயராஜ் (21).

அந்தோணிராஜ் அவரது உறவினர் வீட்டு திருமண விழாவில் ஒலிபெருக்கி கட்டி இருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயராஜ் ஒலிபெருக்கியில் ஏன் பாட்டு போடவில்லை என கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயராஜ் அருகில் கிடந்த கம்பால் அந்தோணி ராஜ்சை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து திசையன்விளை போலீசில் அந்தோணிராஜ் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து ஜெயராஜை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்