கத்தியுடன் வாலிபர் ரகளை

கத்தியுடன் வாலிபர் ரகளையில் ஈடுபட்டார்.

Update: 2023-05-13 19:35 GMT

புதுக்கோட்டை அசாக் நகரில் நேற்று முன்தினம் மதியம் வாலிபர் ஒருவர் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டிருந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் என்பதும் டெல்லியில் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து வந்த நிலையில், மன நலம் பாதிக்கப்பட்டதால் படிப்பை பாதியில் நிறுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்து போலீசார் வரவழைத்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்த பின் அவரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்