டீக்கடை சிலிண்டரில் தீப்பிடித்தது

டீக்கடை சிலிண்டரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-12-04 18:45 GMT

சிவகங்கை பஸ் நிலையத்திற்குள் உள்ள தொண்டி பஸ் நிறுத்தம் பகுதியில் டீ கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் நேற்று மதியம் வழக்கம் போல் வெளியே வைத்து கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி வடை, பஜ்ஜி உள்ளிட்ட பலகாரம் செய்யும் பணியில் அந்த கடைக்காரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அந்த சிலிண்டரில் இருந்து எதிர்பாராதவிதமாக தீ பற்றி எரிய தொடங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் சிலிண்டரில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் பீச்சியடித்து அணைத்தனர். மேலும் அங்கிருந்த தண்ணீர் பாத்திரத்தில் அந்த சிலிண்டரை வைத்து அங்கிருந்து எடுத்து சென்றனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்