செஞ்சி அருகேமனைப்பட்டா கொடுக்க இடம் தேர்வு செய்யும் பணிஉதவி கலெக்டர் ஆய்வு

செஞ்சி அருகே மனைப்பட்டா கொடுக்க இடம் தேர்வு செய்யும் பணியை உதவி கலெக்டர் ஆய்வு செய்தாா்.

Update: 2023-08-06 18:45 GMT


செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள பொன்பத்தி, ஜம்போதி, தடாகம், மேல்பாப்பாம்பாடி, பாடிபள்ளம் ஆகிய ஊராட்சிகளில் பலர் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு அதிகாரிகளிடம் மனு அளித்து இருந்தனர். இதையடுத்து, இவர்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் வகையில் திண்டிவனம் உதவி கலெக்டர் கட்டா ரவி தேஜா மேற்கூறிய கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செஞ்சி தாசில்தார் கார்த்திகேயன் பாடிப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் தாட்சியாயினி கார்த்திகேயன் வருவாய் ஆய்வாளர் பழனி சர்வேயர் திருநாவுக்கரசு, மணி கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்