முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 31-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 31-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-10-26 11:54 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 31-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் 31-ம் தேதி மாலை 6.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கை ரீதியிலான சில முடிவுகளை எடுப்பது குறித்தும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் நிலைகள் குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்